பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் திங் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமினுல் இஸ்லாம்.
இவர், பஹல்காம் தாக்குதலும் புல்வாமா தாக்குதலும் மத்திய அரசின் சதித்திட்டம் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசிய காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், தேசத் துரோக பிரிவுகளின் கீழ் இஸ்லாம் மீது வழக்குப் பதிவு செய்த அஸ்ஸாம் காவல்துறையினர், நாகோன் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க எடுத்து வருகிறோம். சமூக ஊடகங்களில் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் பேசிய விடியோக்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், இஸ்லாமின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும், இத்தகைய சூழலில் எங்கள் கட்சி அரசுக்கு துணையாக நிற்கும் என்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் மௌலானா பதருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.