தீ விபத்து நிகழ்ந்த இடம்.  
இந்தியா

தில்லியில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 400க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம், 2 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தலைநகர் தில்லியில் குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு தில்லியின் ரோகிணிப் பகுதியில் உள்ள ஜுக்கி கிளஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

காவல்துறையின் கூற்றுப்படி, 400க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.

இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்து அடர்த்தியான புகை மூட்டம் எழுவதைக் காண முடிந்தது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

தீயை அணைக்க தற்போது தீயணைப்பு வீரர்கள் முயற்சிக்கின்றனர். மேலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை நடந்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

போலீஸ் மற்றும் தீயணைப்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது, ​​குளிரூட்டும் பணி நடந்து வருகிறது. இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ரோகிணி துணை காவல் ஆணையர் அமித் கோயல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT