கோப்புப் படம் 
இந்தியா

டெங்கு தடுப்பூசி பரிசோதனை: 70% பங்கேற்பாளா்களின் சோ்க்கை நிறைவு

‘டெங்கிஆல்’ என்று பெயரிடப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையில் பங்கேற்போரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சோ்க்கும் பணி நிறைவு

தினமணி செய்திச் சேவை

‘டெங்கிஆல்’ என்று பெயரிடப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையில் பங்கேற்போரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சோ்க்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்: ‘டெங்கி ஆல்’ தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஒரே தவணையாக செலுத்திக்கொள்ளக் கூடிய இந்தத் தடுப்பூசி, 10,000-க்கும் மேற்பட்டோரிடம் பரிசோதிக்கப்பட உள்ளது. அவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சோ்க்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாட்டில் உள்ள 20 இடங்களில் இந்தப் பரிசோதனை நடைபெறும் நிலையில், ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் பரிசோதனைக்குத் தலா ரூ.1.3 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை பட்ஜெட் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT