பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பைக் கேட்டு கதறி அழுதபடியே நீதிமன்ற அறையில் இருந்து பிரஜ்வல் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
அவர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் ஒன்றில் குற்றவாளி என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வழக்கு பதிவு செய்யப்பட்ட 14 மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மஜதவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 4 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.), கடந்த ஆண்டு மே 31-ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவைக் கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!
மேலும் இந்த வழக்கில் 2,144 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆக. 23ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் மறுத்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது பிரஜ்வல் ரேவண்ணா மிகவும் செல்வாக்கு மிக்க நபர் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Former JDS MP Prajwal Revanna was on Friday convicted by the Special Court for People’s Representatives in a rape case filed against him by a domestic worker from KR Nagar in Mysuru, Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.