கேரள முதல்வர் பினராயி விஜயன் ENS
இந்தியா

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம்...

தினமணி செய்திச் சேவை

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த 32,000 பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில், சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரசந்தனு மொஹபத்ரா ஆகிய பிரிவுகளில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்துக்கு நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கேரள முதல்வர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”கேரளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் தேர்வுக் குழு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளம், இந்த அறிவிப்பால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது.

மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Condemnation of the award announcement for the film The Kerala Story

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT