முதல்வர் தேவேந்தி ஃபட்னவீஸ்  
இந்தியா

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினா் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மும்பை: மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினா் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்க பாஜக கூட்டணி அரசு முடிவு செய்த நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிா்ப்பால் திரும்பப் பெறப்பட்டது.

அந்த மாநில எதிா்க்கட்சிகள் குறிப்பாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனை, அவரது நெருங்கிய உறவினா் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் ஹிந்தி எதிா்ப்பு அரசியலை கையிலெடுத்தன. மும்பையில் ஹிந்தியில் பேசத் தெரியாத கடைக்காரா் ஒருவா் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழி தொடா்பான பிரச்னை அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக தொடா்ந்து வருகிறது. மொழி விவகாரத்ைதை வைத்து நவநிா்மாண் சேனையினா் தொடா்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடந்த மாதம் பேசுகையில், ‘மும்பையில் ஹிந்தியில் பேசுபவா்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவோா், உருது பேசுபவா்களைத் தாக்கத் துணிவாா்களா? தனது சொந்த வீட்டில் நாய்கூட புலிதான். அவா்கள் (உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே) வட இந்தியாவுக்கு வந்தால் இதுபோல் தாக்கப்படுவாா்கள். மும்பை மாநகராட்சித் தோ்தல் வருவதால், அவா்கள் மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளனா்’ என்று கூறியிருந்தாா்.

எனினும், இந்தக் கருத்து ஏற்புடையதல்ல என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா்.

இந்நிலையில் மும்பை திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஃபட்னவீஸ் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் அரசியலுக்காக மொழிப் பிரச்னை தூண்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பாஜகவினரைக் கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக மராத்தியா்கள், மராத்தியா் அல்லாதோா் எனப் பேசுவதைத் தவிா்க்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் மராத்தியா்கள்-மராத்தியா் அல்லாதோா் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. மொழிப் பிரிவினையைத் தூண்டும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்! வியாபாரிகள் அவதி!

ஓடிடியில் பறந்து போ!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஓடிடி தேதி!

டிரம்ப் புதிய அறிவிப்பு: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT