மாஸ்கோ சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக மாஸ்கோவிற்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை கிரெம்ளினில் சந்தித்தார்.
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகித வரிவிதிப்பை அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு ஒருநாள் கழித்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து அஜித் தோவல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இருநாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவில் சிறந்த சந்திப்பு. எங்களுக்குள் மிகவும் சிறப்பான நீண்டகால நட்புறவு உள்ளது” எனத் தெரிவித்தார்.
ரஷிய அதிபர் புதின், இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்ததையும் அஜித் தோவல் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.