கர்நாடக மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில், முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுலிடம் கேட்டிருக்கிறார்.
புது தில்லியில் இன்று, மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
ராகுல் செய்தியாளர் சந்திப்பு நடந்த சில நிமிடங்களில், கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
ராகுல் காந்திக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்த்திருப்பது மற்றும் வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களை நீக்கியிருப்பது பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
உங்களது குற்றச்சாட்டின் அடிப்படையில், தேவையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு, 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் பிரிவு 20(3)(பி) இன் கீழ் இணைக்கப்பட்ட பிரகடனம் அல்லது பிரமாணப் பத்திரத்தில், அத்தகைய வாக்காளர்களின் பெயர்களுடன் கையொப்பமிட்டு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்ததாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மாநில தேர்தல் அதிகாரி இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.