விரைவு ரயில் - கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது.

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 வயது பெண் ஒருவர், தனது சகோதரருடன் மகாராஷ்டிரத்தின் பன்வேலில் இருந்து திருச்சூர் நோக்கிப் பயணித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டபோது அந்தப் பெண் கதவின் அருகே நின்றிருக்கிறார்.

அப்போது மர்மநபர் ஒருவர் பெண்ணிடம் இருந்த பையை பறிக்க முயன்றுள்ளார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். உடனே அந்த மர்ம நபரும் கீழே குதித்து, பெண்ணின் ரூ.8,000க்கும் மேற்பட்ட பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார்.

ரயில் நிலையத்திலிருந்து ரயில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தால் பெண்ணிற்கு தலையின் பின்புறத்தில் லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த பெண் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், அந்த நபர் திடீரென வந்து தனது பையைப் பறிக்க முயன்றார். நான் விடவில்லை.

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

அதனால், அவர் என்னைத் தள்ளிவிட்டார், நான் ரயிலில் இருந்து பின்னோக்கி தண்டவாளத்தில் விழுந்தேன். ரயிலில் இருந்த பயணிகள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். நான் மிகவும் பயந்தேன். பின்னர் என்னை அருகிலுள்ள மருத்துவமனைக்கும், அங்கிருந்து மருத்துவக் கல்லூரிக்கும் அழைத்துச் சென்றனர். ஏனெனில் என் தலையில் காயம் மிகவும் ஆழமாக இருந்தது என்றார்.

தப்பியோடிய மர்ம நபரை அடையாளம் கண்டுபிடிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். இதனால் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

A 64-year-old woman was pushed off the slowly moving Sampark Kranti Express shortly after it left Kozhikode railway station and robbed of over Rs 8,000 in cash and a mobile phone, Railway police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 10-08-25

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

“போப்பா..! போ.. போ!” யானையை செல்லமாக காட்டிற்குள் விரட்டிய மக்கள்!

கரும்பும் தமிழரும்...

உபி.: கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலி

SCROLL FOR NEXT