தில்லியில் மழை - கோப்பிலிருந்து 
இந்தியா

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

தில்லியை திணறடிக்கும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது

இணையதளச் செய்திப் பிரிவு

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு முதல் நாட்டின் தலைநகரில் பலத்த மழை பெய்தது, இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தில்லி-என்சிஆர்-இன் பெரும்பாலான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை சனிக்கிழமை காலை வரை நீடித்தது.

இந்த நிலையில், வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய தில்லி என பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில், மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜை நிறைவு

புதிய ரேப்பியா் தறிகளை விநியோகிக்க வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT