ராகுல் காந்தி கைது PTI
இந்தியா

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.

பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டியில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை வழக்கம் போல நாடாளுமன்றம் கூடியி நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில், காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று கலைந்து செல்ல எம்பிக்கள் மறுத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், ரன்தீப் சுர்ஜேவாலா, திருச்சி சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,

”அவர்களால் எங்களிடம் பேச முடியாது என்பதுதான் உண்மை. உண்மை நாட்டு மக்கள் முன் உள்ளது. இந்த போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது.

ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படைக்காக போராடுகிறோம். எங்களுக்கு தேவை சுத்தமான, தூய்மையான வாக்காளர் பட்டியல்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தில்லி காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது:

“பேரணி செல்ல அனுமதி இல்லாததால் எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் 30 எம்பிக்களை சந்திக்க அனுமதி அளித்திருக்கிறது. அவர்கள் பட்டியல் அளித்தால் 30 பேரை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வோம். தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

Opposition leader Rahul Gandhi and MPs have been arrested while trying to march towards the Election Commission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம்

வரப்பெற்றோம் (11-08-2025)

சாதாரண சொற்களுக்குச் சட்டத்தில் சாதாரண அர்த்தம்தானா?

கோபி சுதாகர் மீது வழக்குப் போடுவது சமூக தீண்டாமையை காட்டுகிறது - Seeman

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT