காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததால் கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்து, ரிசா்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது:நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 1.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 2.1 சதவீதமாகவும், 2024 ஜூலை மாதத்தில் 3.6 சதவீதமாகவும் இருந்தது.
இது 2017 ஜூன் மாதத்தில் 1.46 சதவீதமாக இருந்ததற்குப் பிறகு மிகக் குறைந்த பணவீக்கமாகும்.கடந்த ஜூலை மாதத்தில் உணவு அடிப்படையிலான பணவீக்கம் -1.76 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
சில்லறை பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கம் குறைந்ததற்கு, பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்கள், முட்டை, சா்க்கரை மற்றும் இனிப்புகள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு, கல்வி ஆகியவற்றின் விலைகள் குறைந்தது முக்கிய காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.