கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் நக்சல்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வாடா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் இன்று (ஆக.13) ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தத் தாக்குதல்களில் நக்சல்கள் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட நக்சல்கள் 2 பேரது உடல்கள் மற்றும் அவர்களின் ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்தும் நக்சல்களும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

It has been reported that 2 Naxals have been killed in a gunfight with security forces in Chhattisgarh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT