தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர்கள் குறித்த பல்வேறு தரவுகளையும் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிகாரில் பாஜக தலைவர்களும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் அவர்களுக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையமே வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குஜராத் மக்கள், பிகார் மாநில வாக்காளர்களாக மாறி வருகின்றனர். பாஜகவின் பொறுப்பாளரான பிகுபாய் தல்சானியா பாட்னாவின் வாக்காளராக மாறிவிட்டார். அவர் 2024 ஆம் ஆண்டு குஜராத்தில் வாக்களித்தார். அதன்பின்னர் அவர் பெயர் நீக்கப்பட்டு தற்போது பாட்னாவில் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளார். 5 ஆண்டுகள்கூட ஆகவில்லை, அவர் பிகார் தேர்தலிலும் வாக்களிக்க உள்ளார். பிகார் தேர்தல் முடிந்தபிறகு அவர் பெயர் அங்கு நீக்கப்பட்ட பிறகு மீண்டும் எங்கு செல்வார்? இந்த சதித்திட்டத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்துகொண்டு பாஜக மிகப்பெரிய நேர்மையற்ற செயல்களைச் செய்கிறது.
பிகாரில் வாக்குத் திருட்டு நடக்கிறது. பாஜகவுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் இந்த சதித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது மிகத் தீவிரமான பிரச்னை" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.