தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, புது தில்லியில் இன்று(ஆக. 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "எங்களைப் பொருத்தவரையில் சீர்திருத்தம் என்பது - நல்லாட்சியை விரிவுபடுத்துதலே. இதையே சீர்திருத்தம் என்று வலியுறுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தம் ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டவிருக்கிறது.
ஜிஎஸ்டியை எளிமையாக்குவதும், வரி விகிதங்களை சீராய்வதையும் நாங்கள் முயன்று வருகிறோம். இதன்மூலம், ஒவ்வொரு குடும்பமும் பலனடையும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், ஒவ்வொரு சிறு மற்றும் பெரு தொழில்முனைவோர், ஒவ்வொரு வர்த்தகரும், தொழிலதிபரும் இதன்மூலம் பலனடைவர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.