மருத்துவமனை சிகிச்சையில் நவீன் பட்நாயக் படம் - பிஜேடி
இந்தியா

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார்.

சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும், நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக்கிற்கு (78), நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறு விடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

பிஜு ஜனதா தளம் பகிர்ந்துள்ள இந்த விடியோவில், ''சம் மருத்துவமனையில் நான் (நவீன் பட்நாயக்) அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் என்னை மிகச்சிறப்பாக கவனித்துக்கொள்கின்றனர். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்பினால், நவீன் நிவாஸ் (நவீன் பட்நாயக் வீடு) என்றுமே உங்களை வரவேற்றவாறு இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கழுத்துவடத்தில் ஏற்பட்ட பிரச்னைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன் பட்நாயக்கிற்கு, கடந்த ஜூன் 12ஆம் தேதி முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 22 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதையும் படிக்க | டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

Former Odisha chief and BJD chief Naveen Patnaik video from hospital

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் திருநாள்! அரசுப் பேருந்துகளில் 1.21 லட்சம் பேர் பயணம்!

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

இபிஎஸ் தான் முதல்வர்: நயினார் நாகேந்திரன்

மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக: இம்ராம் பிரதாப்கர்ஹி குற்றச்சாட்டு!

ஒபாமா ஒன்றுமே செய்ததில்லை! இந்தியா - பாக். போரை நிறுத்தினேன், நோபல் வேண்டும்! - அதிபர் டிரம்ப் காட்டம்

SCROLL FOR NEXT