ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுடனான போரின்போது, கராச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்த போர்க்கப்பல்கள், வணிக முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானின் சில போர்க்கப்பல்கள் ஈரானில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தானின் மேற்கு துறைமுகமான குவாடருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஏனெனில், பாகிஸ்தானின் போர்க்கப்பல்களைத் தாக்குவது மட்டுமின்றி, போர்க்கப்பல்கள் இருக்கும் கடற்படைத் தளங்களையும் இந்தியா சேதப்படுத்தி விடும் என்று பாகிஸ்தான் அஞ்சியுள்ளது. ஆனால், வணிக முனையங்களில் போர்க்கப்பல்களை நிறுத்தினால், இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். வணிகத் துறைமுகங்களில் வெவ்வேறு நாடுகளின் கப்பல்கள் இருப்பது மட்டுமின்றி, இந்தியா ஒரு மனிதாபிமான நாடு என்பதால் தாக்காது.
போர்க்கப்பல்களை வணிகத் துறைமுகத்துக்கு கொண்டு சென்று, இந்தியாவை வென்று விட்டதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில்தான், மே 8 ஆம் தேதியில் கராச்சி துறைமுகம் குறித்து செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்து புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, மே 7 ஆம் தேதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியாவுடனான போரில் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் திணறியது. இதனையடுத்து, இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டன.
போரில் பாகிஸ்தான் திணறிய போதிலும், இந்தியாவை வென்றுவிட்டதாக அந்நாட்டினர் தொடர்ந்து பொய்யுரைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் வெளியேறிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.