பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று (ஆக. 18) பேசினார்.
இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித்து பகிர்ந்துகொண்டதாகத் தெரிகிறது.
இந்த உரையாடலில், ரஷியா - உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியாவின் நிலைத்தன்மை குறித்தும் மோடி குறிப்பிட்டார். இதற்கான அனைத்துவித முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இரு தலைவர்களும் இந்தியா - ரஷியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் பொதுவாகவுள்ள இதர பிரச்னைகள் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,
''தொலைபேசி அழைப்புக்காகவும் அலாஸ்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்த ஆலோசனை குறித்து பகிர்ந்துகொண்டதற்காகவும் எனது நண்பர் விளாதிமீர் புதினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உக்ரைன் போரில் அமைதியான தீர்மானத்தை எட்ட இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. வரவிருக்கும் நாள்களிலும் இருதரப்பு பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.