சுபான்ஷு சுக்லா  ENS
இந்தியா

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சனம்...

இணையதளச் செய்திப் பிரிவு

சுபான்ஷு சுக்லாவை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் ஈட்ட முற்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சித்துள்ளார்.

ராஜீவ் சுக்லா பேசியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும். பிகாரில் ‘வாக்குரிமைப் பேரணியை’ ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என மக்களுக்குக்கூட பொதுவெளியில் தெரிந்திருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த குழப்பத்துக்கு தீர்வு காணவில்லை.

கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் சாதனைகளை வைத்து அரசியல் ஆதாயம் ஈட்ட அவர்கள்(பாஜக) விரும்புகிறார்கள்” என்றார்.

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பினார். இந்தியா வந்தடைந்த சுபான்ஷு சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று(ஆக. 18) சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், காங்கிரஸின் கருத்து அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

Rajeev Shukla says, They want to gain political benefits from the achievements of Captain Shubhanshu Shukla

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தை இரு பெண்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய ராஜ்நாத் சிங்

தமிழக அரசின் விருதுக்கு தஞ்சாவூா் ஆட்சியா் தோ்வு

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT