ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
ஆந்திர மாநிலத்துக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து...
ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்துக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் விஷாகப்பட்டிணம், அனகப்பள்ளி, அம்பேத்கர் கோனசீமா, காக்கிநாடா, மேற்கு கோதாவரி உள்பட ஏராளமான மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, கனமழை மற்றும் புயல் காற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அம்மாநில தலைமைச் செயலாளர் கே விஜயானந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகத்தை மேற்கொள்ள மின் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.” என தலைமைச் செயலாளர் விஜயானந்த் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 200 மி.மீ. அளவில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீதிமன்றம்
The India Meteorological Department has issued a "red alert" for heavy rainfall for various districts of Andhra Pradesh for the next 24 hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.