சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
நாராயணப்பூர் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 நக்சல்கள், இன்று (ஆக.20) பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் இயங்கி வந்த, சுக்லால் ஜுர்ரி, ஹுர்ரா (எ) ஹிமான்ஷு மிடியம், ராஜு பொடியம் (எ) சுனில் பொடியம், மணிராம் கொர்ராம், சுக்கு ஃபார்ஸா (எ) நாகேஷ், ராமு ராம் போயம், கம்லா கோடா மற்றும் தீபா புனெம் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.
இதில், சுக்லால், ஹுர்ரா ஆகியோர் மீது தலா ரூ.8 லட்சமும், பொடியம் மற்றும் காம்லா ஆகியோ மீது தலா ரூ.5 லட்சமும், மீதமுள்ளவர்கள் மீது தலா ரூ.1 லட்சமும் வெகுமதிகளாக அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்த நக்சல்களுக்கு அரசு திட்டத்தின்படி, ரூ.50,000 நிவாரணமும் அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள நக்சல்கள் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், நாராயணப்பூர் மாவட்டத்தில் மட்டும் நிகழாண்டில் (2025) 148 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.