கோப்புப்படம் 
இந்தியா

அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா!

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் இன்று(ஆக. 20) தாக்கல் செய்யப்பட்டது.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் நண்பகல் 11 மணி வரை, அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவா்களின் தொடர் முழக்கம் அலுவல்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் மக்களவை பகல் 12 மணிக்கு கூடிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் தாக்கல் செய்யதார்.

இந்த மசோதா சட்ட ஒப்புதல் பெற்றால், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும். சூதாட்டச் செயலிகளை பிரபலங்கள் விளம்பரப்படுத்தத் தடை, செயலிகளைத் தடை செய்வது உள்ளிட்டவைகள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை மத்திய உள்துறை அமித் ஷா தாக்கல் செய்தவுடன், மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மசோதாவின் நகல்களை கிழித்து தூக்கியெறிந்தனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் புதன்கிழமையும் அமளி நீடித்தது.

A bill to ban online gambling was introduced in the Lok Sabha today (Aug. 20) amid opposition from opposition parties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

SCROLL FOR NEXT