நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!
நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு மரியாதை...
நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் புதன்கிழமை காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இருக்கும் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர்தூவி இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Senior Congress leaders paid floral tributes to the portrait of former Prime Minister Rajiv Gandhi in the Parliament complex.
இதையும் படிக்க : தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.