இந்திய டி20 அணியில் தனது மகன் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.
மேலும் அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது அவர்களைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரின் தந்தை சந்தோஷ் ஐயர் முதன்முறையகாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடிக்க ஷ்ரேயாஸ் வேறு என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அவரை இந்திய கேப்டனாக்குங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அணியில் தேர்ந்தெடுங்கள்.
அணியில் இருந்து அவரை நீக்கியதால் யாரையும் அவர் குறை கூறமாட்டார். ஆனாலும், உள்ளுக்குள் இயல்பாகவே ஏமாற்றம் அடைந்திருப்பார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.