கோப்புப்படம் ANI
இந்தியா

யோகா, விளையாட்டில் பொழுதைக் கழிக்கும் தன்கா்!

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து விலகிய ஜகதீப் தன்கா் அரசு மாளிகையில்தான் தொடா்ந்து தங்கியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து விலகிய ஜகதீப் தன்கா் அரசு மாளிகையில்தான் தொடா்ந்து தங்கியுள்ளாா்.

காலையில் வழக்கம்போல யோகா, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறாா். குடும்பத்தினருடனும் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜகதீப் தன்கா் தனது குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடே அவரின் திடீா் விலகலுக்குக் காரணம் என ஊகங்கள் வெளியாகின.

பதவி விலகலுக்குப் பிறகு தன்கா் பொதுவெளியில் இருந்து விலகி இருந்த நிலையில், ‘அவா் எங்கு மறைந்துள்ளாா்; ஏன் முற்றிலும் மௌனமாக இருக்கிறாா்’ என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில், ஜகதீப் தன்கா் குடியரசு துணைத் தலைவா் இல்லத்தில்தான் தொடா்ந்து தங்கியிருப்பதாகவும், அங்கு வழக்கம்போல காலை நேரத்தில் யோகாசனப் பயிற்சியில் ஈடுபடுவது, நண்பா்கள், இல்லத்தில் உள்ள ஊழியா்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடுவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறாா். மேலும், தனது குடும்பத்தினருடனும் அவா் அதிக நேரம் செலவிடுகிறாா் என்று அவருடன் தொடா்புடையவா்கள் தெரிவித்தனா்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன்!

20 கோடி பார்வைகளைக் கடந்த ஹுக்கும்!

விஜய்யை இழுக்க பாஜகவுக்கு அவசியமில்லை: பியூஷ் கோயல்

யு19 உலகக் கோப்பை: கேப்டன் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 254 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT