மதுபோதையில் ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகராஷ்டிர மாநிலம், அந்தேரியைச் சேர்ந்த கடைக்காரர் சுஜித் துபே(30). இவர் மதுபோதையில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை திட்டி அந்த விடியோவில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த விடியோ வைரலானதை அடுத்து, கோபமடைந்த எம்என்எஸ் தொண்டர்கள் எம்ஐடிசி காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து இளைஞர் சுஜித் துபேவை போலீஸார் கைது செய்தனர். மேலும் துபே மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் இருந்த துபே இந்த விடியோவைப் பதிவு செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.