நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்த பிரதமர் மோடி, வரும் வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் என 5 ஆண்டுகளில் இலக்கை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது,
உங்கள் அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தேசிய விண்வெளி தினம் நமது இணைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். விண்வெளி துறையில் இணைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்க இஸ்ரோ சவால் நிறைந்த பல்வேறு முயற்சிகளை எடுத்ததில் மகிழ்ச்சி.
இன்று விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவில் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீட்டாக இருந்தாலும் சரி, செயற்கைக்கோள்கள் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் தகவல் மற்றும் பாதுகாப்பாக இருந்தாலும் சரி... அது பேரிடர் மேலாண்மையாக இருந்தாலும் சரி, பிரதமர் கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தில் புவிசார் தரவுகளைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி... இன்று, விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்று பிரதமர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ஐந்து சிறப்பு வாய்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க முடியுமா? இப்போது இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 ராகெட் ஏவுதல்கள் நடைபெறுகிறது. இந்த ஏவுதலில் தனியார் துறையின் பங்கு இருக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை ஏவும் நிலையை அடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வாரமும் ஒரு ராக்கெட்டை நாம் ஏவ வேண்டும். விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனின் தென் துருவத்தை அடைந்து வலாற்றைப் படைத்த முதல் நாடாக இந்தியா மாறியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தினார். இந்தியாவின் விண்வெளி வீரர் குழுவைத் தயார் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்
2035 ஆம் ஆண்டுக்குள், இந்தியா "சொந்த விண்வெளி நிலையத்தை" நிறுவும். 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிலவில் தரையிறங்கும் என்றும், இது இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை உலகின் தலைசிறந்த ஒன்றாக மாற்றும் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.