மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று(ஆக. 24) 8வது நாளை எட்டியுள்ளது.
இதனிடையே, வாக்குத் திருட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
நேற்று, கத்திஹாரில் உள்ள மக்கானா விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார் ராகுல் காந்தி. விவசாயிகளுடன் தாமரை குளத்தில் இறங்கியும் அங்கு மக்கானா பயிர் நடவு செய்வது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த வாக்குரிமைப் பேரணியானது, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி திடலில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.