சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 48 பக்தர்களை சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் வரவேற்றனர், மேலும் 2025ஆம் ஆண்டிற்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழக தலைவர் லுகேந்திர ரசைலி கூறுகையில்,
அதிகாரிகளின் அர்ப்பணிப்புப் பணியின் காரணமாக இந்தாண்டு சுமார் 500 பக்தர்கள் கைலாஷ் மானசேரோவர் சுற்றுப்பயணத்தை சுமூகமாக நிறைவு செய்தனர்.
யாத்திரை எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவடைவதை உறுதி செய்வதற்காகத் துணை ராணுவப் படைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஆதரவுடன் பக்தர்களுக்குப் பல்வேறு ஏற்பாடுகளை அவர்கள் செய்தனர்.
இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாகக் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தாண்டு யாத்திரைக்காக 750 இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 500 பேர் நாது லா பாதை வழியாக 10 குழுக்களாகவும், 250 பேர் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும் பயணம் செய்தனர்.
இந்த யாத்திரையானது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரையில் 19,500 அடி உயரத்தில், மோசமான வானிலை மற்றும் கரடுமுரடான பாதைகளில் மலையேறப்படுகிறது. உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் தகுதியற்றவர்களே இந்த யாத்திரைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.