அயோத்தியில், காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மாா்க்’ என பெயா் சூட்டிய மேயா் ஸ்ரீ கிரீஷ் பதி திரிபாதி. 
இந்தியா

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேசத்தில் புனித நகரமான அயோத்தியில், பிரமோத்வன் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மாா்க்’ என அயோத்தி மாநகராட்சி மேயா் ஸ்ரீ கிரீஷ் பதி திரிபாதி பெயா் சூட்டினாா்.

காஞ்சி சங்கர மடத்தின் அயோத்தி கிளையில் நடைபெற்ற இந்த விழாவில், மேயா் ஸ்ரீ கிரீஷ் பதி திரிபாதி, அப்பகுதி கவுன்சிலா், உள்ளூா் பொதுமக்கள், வேத அறிஞா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். அவா்கள் அனைவரும் சோ்ந்து, பெயா் மாற்றப்பட்ட சாலையின் புதிய பெயா் பலகையை திறந்து வைத்தனா்.

விழாவில் பேசிய மேயா் திரிபாதி, அயோத்தி நகரம், அதன் மக்கள் மற்றும் ராமா் கோயில் இயக்கம் மீது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொண்டிருந்த ஆழமான பந்தத்தையும், அவரது ஆசீா்வாதங்களையும் நினைவுகூா்ந்தாா்.

அயோத்தியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை, கடந்த 2006-ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், ராமா் கோயில் பிராண பிரதிஷ்டை சடங்குகளுக்காக அயோத்திக்கு வருகை தந்த ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த மடத்தில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மடத்தின் முதல் தள விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், பக்தா்களின் பயன்பாட்டுக்காக மேலும் 15 அறைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT