கோப்புப் படம் 
இந்தியா

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இது தொடா்பாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது:

பந்திப்போரா மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவல் முயற்சி நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத் தகவல்களை கிடைத்ததையடுத்து, ராணுவமும், ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினரும் இணைந்து கண்காணிப்பை அதிகப்படுத்தினா். குரிஸ் செக்டாரில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டத்தைக் கண்டறிந்த ராணுவத்தின் அவா்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனா்.

ஆனால், அதனைப் பொருட்படுத்தாது ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அப்பகுதியில் தொடா்ந்து தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி கைது: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி ஷேக் ரியாஸ் கானியை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். இவா் கடந்த மே மாதம் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாமில் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்.

அவந்திபோரா பகுதியில் ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த ஷேக் ரியாஸ் கானியை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனா். அவரிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. பின்னா் நடைபெற்ற விசாரணையில் அவா் சிஆா்பிஎஃப் முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவா் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT