பிகாருக்குள் பயங்கரவாதிகள் 
இந்தியா

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

பிகாருக்குள் பயங்கரவாதிகள் நுழைந்ததாக வந்திருக்கும் தகவலையடுத்து, உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் பிகாருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வரப்பெற்றதையடுத்து, உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

தேரதல் நடைபெறவிருக்கும் நிலையில், ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் பிகாருக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியா - நேபாள எல்லை வழியாக மூன்று பயங்கரவாதிகள் பிகாருக்குள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

பிகாருக்குள் நுழைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வரைபடங்களை காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். மேலும், பிகார் எல்லைப் பகுதிகளில் குறிப்பாக நேபாளத்தை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிகாரில், பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருக்கும் இந்த தகவல், காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என முக்கிய தலைவர்கள் பிகாருக்கு வந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அது மட்டுமல்லாமல், பிகாரில் ராகுல், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டு, 23 மாவட்டங்களுக்கு பேரணியாகச் செல்கிறார். இதில், நோபளத்தை ஒட்டிய இரண்டு பகுதிகளும் அடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT