தொடர் மழை 
இந்தியா

தில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை: காலை முதல் தொடர் மழை!

தில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: தேசிய தலைநகர் புது தில்லிக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே விடாமல் மழை பெய்து வருகிறது.

புது தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தால், நொய்டாவுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் தில்லியின் சில பகுதிகளில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், பிற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி - நொய்டா நேரடி சாலை மற்றும் மதுரா சாலை, விகாஸ் மார்கம், கீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பதர்பூர் முதல் அஷ்ரம் வரை சாலை முழுக்க வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. காலை முதல் பெய்து வரும் மழையால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஏராளமான போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 4 சிறாா்கள் காயம்

தமிழகத்தின் உரத் தேவையை நிறைவேற்றுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாமக நிறுவனா் ச.ராமதாஸ் - ஈ.ஆா்.ஈஸ்வரன் சந்திப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: நவாஸ் கனி எம்.பி. பதிலளிக்க உத்தரவு

வங்கக் கடலில் புயல்: மீனவா்கள் கடலுக்குள் செல்ல 7 நாள்களுக்குத் தடை

SCROLL FOR NEXT