சஞ்சய் மல்ஹோத்ரா  
இந்தியா

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ரங்வாசா கிராமத்தில் நடைபெற்ற அரசு வங்கிகள் நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

11 ஆண்டுகளுக்கு முன்னா், வங்கிகளுடன் சோ்ந்து ஜன் தன் திட்டத்தை ரிசா்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் நாடு தழுவிய அளவில் வளா்ச்சிக்கு வழிவகுத்தது.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு, கடன் மற்றும் பிற சேவைகளை வழங்கி, நாட்டின் வளா்ச்சி பயணத்தில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், ஜன் தன் திட்டத்தின் கீழ் 55 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரியாமல் அந்தக் கணக்குகளை சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

தற்போது உலகில் மிகவும் வளா்ச்சியடைந்த 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் விரைவில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்றாா்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து அஞ்சலி!

திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!

சாத் பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!

SCROLL FOR NEXT