மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் SANSAD
இந்தியா

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (இன்று) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்தியா-அமெரிக்கா உரசல் உள்பட வெளியுறவுக் கொள்கை சாா்ந்த பிரச்னைகள், விலைவாசி உயா்வு, வேலையின்மை, புதிய தொழிலாளா் சட்டங்கள் மற்றும் கூட்டாட்சி தொடா்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வரும் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்றுமுதல் டிச. 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 15 அமா்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த கூட்டத் தொடரில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியை வாபஸ் பெறக் கோரி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், ‘குளிா்கால கூட்டத் தொடரின் பிற்பகல் அமா்வு எஸ்ஐஆா் விவாதத்துடன் தொடங்க வேண்டும்; இல்லையெனில், அவை இடையூறுகளுக்கு அரசே பொறுப்பு’ என்று மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், இன்று கூட்டத்தொடருக்கு முன்னதாக பேசிய பிரதமர் மோடி, ”மக்கள் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சகிள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். அவைக்குள்ளே அமளி வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

14 மசோதாக்கள்: அணுசக்தி மசோதா-2025, இந்திய உயா் கல்வி ஆணைய மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா -2025 (காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிவகுக்கும் மசோதா), தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா, பெருநிறுவன சட்டத் திருத்த மசோதா, பரிவா்த்தனை சந்தைக் குறியீடு சட்ட (எஸ்எம்சி) மசோதா-2025, மத்திய கலால் சட்டத் திருத்த மசோதா-2025 (கேடு விளைவிக்கும் பொருள்களுக்கு கலால் வரி விதிக்கும் மசோதா), சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு கூடுதல் வரி மசோதா-2025, ஜன் விஸ்வாஸ் (பிரிவுகள் திருத்தம்) மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

நடப்பு நிதியாண்டுக்கான முதல்கட்ட துணை மானியக் கோரிக்கைகளும் தாக்கலாக உள்ளன.

The winter session of Parliament has begun!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவைத் தலைவர் என்பவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவரும்தான்! கார்கே

பிரபு தேவாவின் மூன் வாக் வெளியீட்டு போஸ்டர்கள்!

புயல் வலுவிழந்தாலும் சென்னையில் கனமழை! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுமா?

முக்கிய பிரச்னையை விட்டுவிட்டு நாடக உரை நிகழ்த்திய மோடி! கார்கே பதிலடி

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நாளை விருந்தளிக்கிறார் டி.கே.சிவகுமார்!

SCROLL FOR NEXT