இண்டிகோ (கோப்புப்படம்) ANI
இந்தியா

ஹைதராபாதில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாதின் ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, இன்று (டிச. 4) மதியம் இண்டிகோ விமானம் புறப்பட்டது.

இந்த நிலையில், விமான நிலையத்தின் வாடிக்கையாளர் ஆதரவு ஐடிக்கு இன்று மதியம் 2 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து வரும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஹைதராபாத் விமான நிலையத்தில் மாலை 3.15 மணியளவில் இண்டிகோ விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

இத்துடன், மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விமானம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, சௌதி அரேபியாவின் மதீனாவில் இருந்து ஹைதராபாத் வந்த மற்றொரு இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் அவசரமாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மிசோரம் முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கௌஷல் காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!

A bomb threat has been made against an IndiGo flight from Sharjah at Rajiv Gandhi International Airport in Hyderabad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அமெரிக்கா (புகைப்படங்களில்)!

பரபரக்கும் திருப்பரங்குன்றம்... நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, இந்து அமைப்பினர் கைது!

சிவப்பு நிலா... அன்மோல் பலூச்!

இந்த வார ஓடிடி படங்கள்!

கருப்பு எனக்குப் பிடித்த மொழி... பூமி பெட்னெகர்!

SCROLL FOR NEXT