நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்! x/ANI
இந்தியா

தில்லி காற்றுமாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீட்டித்து வருகின்றது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், முகக்கவசம் அணிந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமையும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக புதன்கிழமையும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Delhi air pollution: MPs protest in Parliament wearing masks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏவிஎம் சரவணன் மறைவு! முதல்வர் ஸ்டாலின், ரஜினி அஞ்சலி!

டியூட்-க்கு அனுமதியளித்த இளையராஜா!

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!

போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல்: சிபிசிஐடி போலீசார் அதிரடி

திருப்பரங்குன்றம்: தனி நீதிபதி உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு! தமிழக அரசு வாதம்!

SCROLL FOR NEXT