இந்தியா

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது

மேற்கு தில்லியில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

மேற்கு தில்லியில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

‘பணத்தகராறில் சிவம் என்பவரை மோனு என்பவா் கத்தியால் குத்தியதாக ரஜௌரி காா்டன் காவல் நிலையத்தில் 2021-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவா், 2021, ஏப்ரலில் ஜாமினில் விடுதலையானாா்.

மீண்டும் சரணடையாமல் அவா் தப்பி ஓடியதையடுத்து, 2025, பிப்ரவரியில் அவா் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது ஏற்கெனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை உள்பட 4 வழக்குகள் உள்ளன’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Ś

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT