கோப்புப்படம் IANS
இந்தியா

விமான சேவை பாதிப்பு: 7 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக ரயில்வேயின் அறிவிப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் விமான சேவை பாதிப்பால் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இண்டிகோ விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வு விதிகளை நிறுத்திவைப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

விமானிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் கட்டாய ஓய்வு விதியால் , இண்டிகோ விமான நிறுவனத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த சில நாள்களாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிஜிசிஏ புதிய விதிகளை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இன்றும் பெரும்பாலான நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் விமான சேவை பாதிப்பால் பலரும் ரயில்களை நாடி வருகின்றனர். இதனால் சில குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இண்டிகோ விமான சேவை பாதிப்பால் பயணிகளுக்கு இந்திய ரயில்வே மாற்று போக்குவரத்தை வழங்க முன்வந்துள்ளது. அதன்படி கீழ்குறிப்பிட்ட 7 முக்கிய ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி(3 tier AC) பெட்டி இணைக்கப்படவுள்ளது.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு

1. டிசம்பர் 6 முதல் திருச்சிராப்பள்ளி - ஜோத்பூர் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (20482).

2. டிசம்பர் 10 முதல் ஜோத்பூர் - திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்(20481).

3. டிசம்பர் 6 முதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12695)

4. டிசம்பர் 7 முதல் திருவனந்தபுரம் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12696)

5. டிசம்பர் 6 முதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12601)

6. டிசம்பர் 6 முதல் சென்னை கடற்கரை - மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(22158)

7. டிசம்பர் 7 முதல் மும்பை சிஎஸ்டி - சென்னை கடற்கரை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(22157)

இந்த ரயில்களில் தற்காலிகமாக ஒரு ஏசி கூடுதலாக இணைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

செகந்திராபாத் - சென்னை எழும்பூர்

மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே டிச. 6, 7 தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில்(07146) டிச. 7 ஆம் தேதி காலை 8 மணிக்கு எழும்பூரை அடையும்.

அதேபோல மறுவழியில், சென்னை எழும்பூரில் இருந்து டிச. 7 பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு (07147) டிச. 8 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு செகந்திரபாத்தை அடையும்.

பெங்களூரு - சென்னை எழும்பூர்

அதேபோல பெங்களூரு - சென்னை எழும்பூர் இடையே டிச. 7, 8 தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 7 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு பெங்களுருவில் இருந்து புறப்படும் ரயில்(06255) டிச. 7 பிற்பகல் 2.45 மணிக்கு எழும்பூரை அடையும்.

அதேபோல மறுவழியில், சென்னை எழும்பூரில் இருந்து டிச. 7 பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு (06256) அன்று இரவு 10.45 மணிக்கு பெங்களூருவை அடையும்.

சென்னை எழும்பூர் - சார்லபள்ளி

சென்னை எழும்பூரிலிருந்து டிச. 6 சனிக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரயில்(06019) சர்லபள்ளியை டிச. 7ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சார்லபள்ளியைச் சென்றடையும்.

மறுவழித்தடத்தில் சார்லபள்ளியிலிருந்து டிச. 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குப் புறப்படும் ரயில்(06020) டிச. 8 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் - தாம்பரம்

நாகர்கோவிலில் இருந்து டிச. 7 இரவு 11. 15 மணிக்குப் புறப்படும் ரயில்(06012) மறுநாள்(டிச. 8) காலை 11.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

மறுவழியில் தாம்பரத்தில் இருந்து டிச. 8 பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் ரயில்(06011) மறுநாள்(டிச. 9) அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர்

திருவனந்தபுரத்தில் இருந்து டிச. 7 மாலை 3.45 மணிக்குப் புறப்படும் ரயில்(06108) மறுநாள்(டிச. 8) காலை 11.20 மணிக்கு எழும்பூரை அடையும்.

மறுவழியில் எழும்பூரில் இருந்து டிச. 8 பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் ரயில்(06107) மறுநாள்(டிச. 9) காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

கோவை - சென்னை சென்ட்ரல்

கோவையில் இருந்து டிச. 7 இரவு 11.30 மணிக்குப் புறப்படும் ரயில்(06024) மறுநாள்(டிச. 8) காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

மறுவழியில் சென்ட்ரலில் இருந்து டிச. 8 பகல் 12.20 மணிக்குப் புறப்படும் ரயில்(06023) அன்று இரவு 10.30 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

To support passengers affected by indigo flight cancellations, Southern Railway is providing extra AC Three-Tier coaches on select trains from 6th–10th December 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பாஜக: முதல்வர் தாமி

விமானத் துறை 2 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது ஏன்?: ப. சிதம்பரம்

பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்: புதிய உச்ச வரம்பை நிர்ணயித்த மத்திய அரசு!

பூவுக்குள் ஒளிந்திருக்கும் மெல்லிடை மங்கை!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

SCROLL FOR NEXT