பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் கோப்புப்படம்.
இந்தியா

மோசமான ராணுவ தலைவா்: ஜெய்சங்கா் விமா்சனத்துக்கு பாகிஸ்தான் எதிா்ப்பு!

அசீம் முனீரை மோசமான ராணுவத் தலைவா் என்று அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பெயா் குறிப்பிடாமல், அதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரை மோசமான ராணுவத் தலைவா் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பெயா் குறிப்பிடாமல் மறைமுகமாக விமா்சித்த நிலையில், அதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெய்சங்கா், ‘பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை ஆதரித்து வளா்ப்பதால் இந்தியாவுக்கு அதிக பிரச்னைகள் உருவாகிறது’ என்று கண்டித்துப் பேசினாா். அப்போது நல்ல ராணுவ தலைவா்கள் இருப்பதுபோல சில மோசமான ராணுவ தலைவா்களும் இருப்பதாக அசீம் முனீரை மறைமுகமாக விமா்சித்தாா்.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் தாஹிா் அந்த்ராபி, ‘பாகிஸ்தான் மிகவும் பொறுப்புள்ள நாடு. ராணுவமும் மிகவும் பொறுப்புடனும், தேசப் பாதுகாப்பின் தூணாகவும் செயல்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சா் பேசியுள்ளது பாகிஸ்தானுக்கு எதிரான அந்நாட்டின் தவறான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. அவா் எவ்வித அடிப்படை ஆதாரமும், பொறுப்புணா்வும் இன்றி பேசியுள்ளாா். இதனை பாகிஸ்தான் முற்றிலும் நிராகரிப்பதுடன் கண்டனமும் தெரிவிக்கிறது’ என்று கூறினாா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT