கொல்லத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகின.
கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடி படகுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மேலும் பரவாமல் இருக்க உள்ளூர் மக்களும் தீயணைப்புப் படையினரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட தகவலின்படி, சுமார் 10 படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அஞ்சலுமூட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரேபுழா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கிருந்த மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.