சட்டவிரோதமாக ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்த சீன நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது,
சீன நாட்டைச் சேர்ந்த ஹூ காங்டாய் (29). இவர் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி சுற்றுலா விசாவில் தில்லிக்கு வந்தார். வாரணாசி, ஆக்ரா, புது தில்லி, ஜெய்ப்பூர், சாரநாத், கயா மற்றும் குஷி நகர் ஆகிய இடங்களில் உள்ள புத்த மத தலங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்து. இருப்பினும் அவர் நவம்பர் 20ல் லேவுக்கு விமானத்தில் சென்றார். ஆனால் லே விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக கவுண்டரில் அவர் பதிவு செய்யவில்லை.
ஜான்கர் பகுதியில் அவர மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்து, டிசம்பர் 1ஆம் தேதி ஸ்ரீநகரில் தங்கியிருந்து இமாலய ஒட்டியுள்ள பகுதிகளையும் அவர் சுற்றிப் பார்த்துள்ளார். அதன்பிறகு டிசம்பர் 1ல் ஸ்ரீநகர் வந்தார்.
மேலும், அவர் சட்டவிரோதமாக சிம்கார்டையும் வாங்கி பயன்படுத்தியுள்ளார். அவரது தொலைபேசியை ஆராய்ந்தபோது சிஆர்பிஎஃப் ராணுவ தளங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் 370 பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.
இவரை போலீஸார் கைது செய்து விசாரித்ததில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ளார், மேலும் அவர் பயணம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார். அவரது பாஸ்போர்ட்டில் அமெரிக்கா, நியூசிலாந்து, பிரேசில் மற்றும் பிஜி மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தார்கள். அவர் விசா விதிமுறைகளை மீறியதாகவும், முடிந்தால், அவரை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
An unusual chatter on the Internet intercepted by the army alerted security agencies in the Kashmir valley, leading to the detention of a Chinese national who had entered Ladakh and Jammu and Kashmir without permission, officials said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.