வெளிநாட்டு படையெடுப்பாளர்களைப் போற்றுபவர்கள் அடிமைத்தன மனநிலையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இந்தியா நாகரீக மரபில் பெருமை கொள்ள வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.
இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரவ் பிபின் ராவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு ராணுவப் பள்ளியில் அவரது பெயரிடப்பட்ட கலையரங்கத்தைத் திறந்துவைத்தார். பிபின் ராவத்தின் சிலையைத் திறந்துவைத்து அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
2021 டிசம்பர் 8ல் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் பலியாகினர்.
கூட்டத்தில் உரையாற்றிய ஆதித்யநாத்,
ஜெனரல் ராவத் தேசிய பெருமை, கடமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்துவதாகவும், புதிய கலையரங்கம் மற்றும் அவரது சிலை திறக்கப்பட்டது. இது எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும்.
2022ல் சுதந்திர தின உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் தேசிய மறுமலர்ச்சிக்காக "பஞ்ச் பிரான்" (ஐந்து தீர்மானங்கள்) ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
பலவீனமான அல்லது ஏழை இந்தியாவை விரும்பும் உண்மையான இந்தியர் யாராவது உண்டா? ஒவ்வொரு உண்மையான இந்தியரும் பாதுகாப்பான, வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற தேசத்தை விரும்புகிறார்கள். அத்தகைய பாரதத்தை நாம் கட்டியெழுப்ப விரும்பினால், ஐந்து தீர்மானங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர் கூறினார்.
நாம் நமது சொந்த பலத்தையும், திறன்களையும் நம்பத் தொடங்கியுள்ளதால் உத்தரப் பிரதேசமும், இந்தியாவும் முன்னேறி வருகின்றன.
இந்தியர்கள் ஏன் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களைப் பெருமைப்படுத்த வேண்டும், அலெக்சாண்டரை ஏன் சிறந்தவர் என்று அழைக்க வேண்டும்? மஹாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, குரு கோபிந்த் சிங், பிரித்விராஜ் சௌகான், ஜெனரன் பிபின் ராவத் ஏன் இல்லை? இவர்கள் எல்லோரும் நமது துணிச்சலான வீரர்கள் மற்றும் பரம் வீர் சக்ரா விருதுகளைப் பெற்றவர்கள்.
வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் ஒருபோதும் நமது ஹீரோக்களாக இருக்க முடியாது. அடிமைத்தன மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும், வரலாற்றைத் திரித்து அவர்களைச் சிறந்தவர்களாகச் சித்தரிப்பவர்களை விட உயர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு அல்ல, வாக்குக் கொள்ளை! அகிலேஷ் யாதவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.