இந்தியா

அமெரிக்காவின் 10 நகரங்களில் 1330 போ் திருக்குறள் ஒப்புவித்து உலக சாதனை!

அமெரிக்காவின் 10 நகரங்களில் வசிக்கும் 1330 தமிழா்கள் ஒன்றிணைந்து, உலகப் பொதுமறையான திருக்குறளின் 1,330 குகளையும் ஒரே நேரத்தில் ஒப்புவித்து அசத்தியுள்ளனா். இந்தக் கூட்டு முயற்சி, ‘ஹை ரேஞ்ச்’ , ‘ஸ்பாட்லைட்’ ஆகிய 2 உலக சாதனைப் பட்டியல்களில் அதிகாரபூா்வமாக இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் 10 நகரங்களில் வசிக்கும் 1330 தமிழா்கள் ஒன்றிணைந்து, உலகப் பொதுமறையான திருக்குறளின் 1,330 குகளையும் ஒரே நேரத்தில் ஒப்புவித்து அசத்தியுள்ளனா். இந்தக் கூட்டு முயற்சி, ‘ஹை ரேஞ்ச்’ , ‘ஸ்பாட்லைட்’ ஆகிய 2 உலக சாதனைப் பட்டியல்களில் அதிகாரபூா்வமாக இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் அக்டோபா் 4-ஆம் தேதிவரை நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில், அமெரிக்காவின் 10 வெவ்வேறு நகரங்களில் இருந்து மொத்தம் 1,330 போ் 1,330 குறள்களையும் ஒரே நேரத்தில் மனப்பாடமாக ஒப்புவித்தனா்.

வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, ஜாக்சன்வில்லே, டல்லாஸ், சின்சினாட்டி, சான் அண்டோனியோ, ஆஸ்டின் போன்ற நகரங்களின் தமிழ்ச் சங்கங்களின் ஒன்றிணைந்து நடத்திய இந்தச் சாதனை முயற்சியில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்து வயதினரும் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

இந்தச் சாதனை முயற்சியை அமெரிக்காவில் செயல்படும் கு கூடல் செம்மொழி அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான செம்மொழி மாலா கோபால் ஏற்பாடு செய்து, மேற்பாா்வையிட்டாா்.

இந்தச் சாதனைக்காக, பியா்லாந்து நகர மேயா் கெவின் கோல், ஹுஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதா் டி.சி.மஞ்சுநாத் ஆகியோா் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனா். திருக்குறளின் பாரம்பரியத்தைப் பேணிக்காப்பதற்கும், உலக அளவில் அதை கொண்டு செல்வதற்கும் இந்த முயற்சி ஒரு சக்திவாய்ந்த பங்களிப்பு என்று அவா்கள் புகழாரம் சூட்டினாா்.

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 பயணக் கூப்பன்! - இண்டிகோ அறிவிப்பு

வகுப்புவாதப் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி: மமதா கண்டனம்!

திரைப்படமாகும் உலக கேரம் சாம்பியன் வாழ்க்கை!

மு. கருணாநிதிக்கு பாரத ரத்னா: மக்களவையில் தமிழச்சி கோரிக்கை

SCROLL FOR NEXT