மத்ஸ்யா 6000 திட்டம் 
இந்தியா

நாட்டின் முதல், மனித ஆழ்கடல் திட்டம் மத்ஸ்யா-6000 முன்னேற்றம்!

மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலான மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

மனிதர்களை, ஆழ்கடல் பயணம் கொண்டு செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டமான மத்ஸ்யா 6000, முன்னேற்றம் அடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் விரைவாக நடந்து வரும் நிலையில், மறுபக்கம், ஆழ்கடலுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் மத்ஸ்யா திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்ஸ்யா 6000 திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒரு மனித ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டமான மத்ஸ்யா 6000 என்பது, முன்னேற்றம் அடைந்து வருகிறது.

நாட்டின் முதல், உள்நாட்டின் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படும் மனித ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலான மத்ஸ்யா 6000 திட்டத்தின் முதல்படியாக, வரும் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதல் சோதனை நடத்தி முடிக்கப்படும் என்றும், அதில் 500 மீட்டர் ஆழத்துக்கு நீர்மூழ்கிக் கப்பல் செலுத்தி சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த வகையான பரிகாரம் ஒருவருக்கு வேலை செய்யும்?

”இனிமே 2 வருடத்திற்கு ஒரு படம்!” சத்தியம் செய்த இயக்குநர் நலன் குமாரசாமி | Karthi

நீதிபதி ஒருவர், எச்.ராஜா, ஆளுநர் ஆர்.என்.ரவி போல செயல்படுவதா? ஓய்வுபெற்ற நீதிபதி

முதல் இந்தியராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய புதிய சாதனை!

தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! தடுமாறும் மிட், ஸ்மால்கேப் பங்குகள்!

SCROLL FOR NEXT