யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதை இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை தீபாவளி நம் கலாசாரம் மற்றும் நெறிமுறைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது ஒளியையும் நீதியையும் வெளிப்படுத்துகிறது.
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது திருவிழாவின் உலகளாவிய புகழுக்கு மேலும் பங்களிக்கும் என்று பிரதமர் கூறினார்.
பிரபு ஸ்ரீ ராமரின் கொள்ளைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
தில்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிக்க: யுனெஸ்கோ கலாசார பட்டியலில் தீபாவளி பண்டிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.