வாக்குப்பதிவு 
இந்தியா

கேரள உள்ளாட்சி தேர்தல்: 1 மணி நிலவரப்படி 51.05% வாக்குப்பதிவு!

கேரள உள்ளாட்சி தேர்தலில் 1 மணி நிலவரம்..

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

கேரளத்தில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு டிச. 9 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில்70.9% வாக்குகள் பதிவாகின.

தொடர்ந்து இன்று (டிச. 11) திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிற்பகல் 1.15 மணி நிலவரப்படி 51,05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வயநாடு 50.46 சதவிகிதம்

கண்ணூர் 49.23%

காசர்கோடு 49.52%

திருச்சூர் 49.44%

பாலக்காடு 51.46%

மலப்புறம் 52.62%

கோழிக்கோடு 51.13%

மொத்த வாக்குப்பதிவு 51.05%

இன்று காலை கண்ணூர் மாவட்டத்தில் பினராயி கிராம பஞ்சாயத்தில் செரிகல் ஜூனியர் பள்ளியில் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவரது குடும்பத்தினரும் அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். 604 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12931 வார்டுகளில் 1.53 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

In the second phase of the local body elections being held today in Kerala, 50 percent of the votes have been cast as of 1 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா பல்கலை. ஆய்வகத்தில் விபத்து: இரு மாணவா்கள் காயம்

கடகத்துக்கு காரிய வெற்றி: தினப்பலன்கள்!

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு கண்டனம்: மத்திய அரசு

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT