அகமதாபாத்தில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் சயின்ஸ் சிட்டி சாலையில் உள்ள வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஹோட்டல் சிட்டிசன் இன்னில் பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் எட்டு முதல் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ஏணிகளைப் பயன்படுத்தியும் தீயணைப்பு வீரர்கள் கட்டடத்திலிருந்து 35 பேரை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
ஹோட்டலின் குளிர்சாதன பெட்டி, எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஹோட்டல் மேலாளர் அனில் படேல், தீ விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.