மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் இன்று(டிச.12) காலை காலமானார். அவருக்கு வயது 91.
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவராஜ் பாட்டீல், வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக இன்று காலை 6.30 மணியளவில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், காலை காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சிவராஜ் பாட்டீல் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் மக்களவைத் தலைவராகவும் மத்திய அமைச்சரவையில் பல்வேறு முக்கிய துறைகளில் பதவி வகித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராகவும் 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகப் பணியாற்றினார் சிவராஜ் பாட்டீல்.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். லாத்தூர் மக்களவைத் தொகுதியில் ஏழு முறை வெற்றிபெற்ற பெருமையையும் அவர் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.