அந்தமானில் சாவர்க்கரின் சிலையை அமித் ஷா, மோகன் பாகவத் திறந்து வைத்தனர் PTI
இந்தியா

அந்தமானில் சாவர்க்கர் சிலை! அமித் ஷா, பாகவத் திறந்து வைத்தனர்!

அந்தமானில் சாவர்க்கரின் சிலையை அமித் ஷா, மோகன் பாகவத் திறந்து வைத்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

அந்தமான் நிகோபார் தீவில், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.

தெற்கு அந்தமான் மாவட்டத்தின் பியோத்னாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்ட விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் இன்று (டிச. 12) திறந்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அந்தப் பூங்காவில் இன்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித் ஷா மற்றும் மோகன் பாகவத் ருத்ராக்‌ஷ மரக்கன்றுகளை அங்கு நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், அந்தமான் நிகோபாரின் துணைநிலை ஆளுநர் டி.கே. ஜோஷி பங்கேற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஜயபுரத்தில் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அமைச்சர் அமித் ஷா மற்றும் மோகன் பாகவத், சாவர்க்கர் குறித்து உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாடலை வெளியிடவுள்ளனர்.

முன்னதாக, விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில், அந்தமானில் உள்ள காலாபானி சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உ.பி.: பெற்றோருக்கு நடுவில் தூங்கிய குழந்தை திடீர் பலி- மனதை உலுக்கும் சோகப் பின்னணி

Home Minister Amit Shah and RSS chief Mohan Bhagwat inaugurated the statue of Savarkar in the Andaman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

SCROLL FOR NEXT